Thursday, November 1, 2012

புதையுண்ட தனுஷ்கோடி


மனித வாழ்க்கை நிலையற்றது என்பதை பல நிகழ்வுகளில் படித்தும், அறிந்தும், அனுபவித்தும் வந்திருகின்றோம். அவ்வாறே, காலங்களை கடந்து வந்து கொண்டு தான் இருக்கிறோம். அந்த நிலையற்ற வாழ்க்கையை, நம் தென்கோடி மக்களில் ஒருகடல் பகுதி மக்கள், ஒரே இரவில் தொலைத்த நிகழ்வும்  நடந்துள்ளன.

புயல் என்று சொன்னாலே எனக்கு ஏனோ, தனுஷ்கோடி தான் எப்போதும் நினைவுக்கு வரும் . தனுஷ்கோடி ,
1964 புயலுக்கு முன் வரைஅழகான குட்டி நகராக,  புண்ணிய ஸ்தலமாகவே இருந்து  வந்துள்ளது. அங்கிருந்து, அன்றைய நாட்களில்  இலங்கைக்கு  சிறிய கப்பல் (ferry service)  மூலமாக, 31 கிலோ மிட்டர் தூரத்தை, வெகு எளிதாக  போய் வந்து கொண்டிருந்தார்கள் என  சொல்லுவார்கள்.  




தனுஷ்கோடி


1964 வருஷம் முன்பு வரை,  சதர்ன் ரயில்வே எக்மோரிலிருந்து தனுஸ்கோடி வரை ரயில்வே சேவையை அளித்துள்ளார்கள். தனுஷ்கோடியிலிருந்து,  ஃபெர்ரி மூலமாக இலங்கையின் தலைமன்னார் வரை, யாத்ரீகளுக்கு, தமிழக மற்றும் இலங்கை மக்களுக்கு போட் மெயில் சர்வீஸ்-  சேவையாக பல ஆண்டுகள் நடந்திருக்கின்றன.

முதலில் தனுஷ்கோடி எங்கே இருந்தது எனத் தெரிந்துகொள்வோம். மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி பயணம் செய்தால்,  இந்து மாக்கடல் ஆரம்பத்தின் முதலில் வரும் ஊர்- தங்கச்சி மடம் . அதனையும், ராமேஸ்வரம் நகரத்தையும் இணைப்பது பாம்பன் பாலம். அந்தக் காலத்தில், ராமேஸ்வரம் அடுத்து பாம்பன்தீவு இருந்துள்ளது. இது ஒரு சிறிய ஐலண்ட். அடுத்த ஊர்,  அதில் இருந்த முக்கிய கடல் வாணிப நகரம் தான் தனுஷ்கோடி. வெள்ளைக்காரன் காலத்தில், மெட்ராஸில் இருந்து, தனுஷ்கோடி வரை ரயில் வசதி கூட இருந்தது. கடல் மட்டத்தில் இருந்து சற்று உயரத்தில் தான் ரயில் பாலம் போய்க் கொண்டிருந்ததாம். தனுஷ்கோடி என்றால் முக்தி ஸ்தலம் ஆயிற்றே. முக்கடல் சந்திப்பு வேற. யாத்திரீகர்கள் வருவார்கள், போவார்கள். இலங்கை  மிகவும் பக்கம். அதனால் இலங்கை பயணம் செய்வோர் எனவும் இருந்ததால் தனுஷ்கோடி பிசியான நகரமாக உருவாகி இருந்தது. 

Church


வழக்கமான புயல் காலம். ஆனால், இந்த முறை, டிசம்பர் 21 ஆம் தேதி காலையிலிருந்தே அதி தீவிரம் அடைந்த புயலாய் உருவாகி, நேர்க்கோடு போட்ட மாதிரி, மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. அன்றைக்கு மட்டும் வீசிய காற்றின் அளவு, மணிக்கு 240 கிமி லிருந்து 280 கிமீ (280 km /day ) வரை இருந்துள்ளது. அது மறுநாளும் தொடர்ந்துள்ளது. ஆனால் இன்னொரு தியரியும் சொல்கிறார்கள்- அன்று அடித்த காற்று, மணிக்கு நானூறு கிமீலிருந்து ஐநூறு கிமீ வேகம் வீசியிருக்கலாம் என்கிறார்கள். 

டிசம்பர் 22 ஆம் தேதி, இரவு, பத்து மணிக்கு மேல் 240 கிமீ வேகத்திலே அதி தீவிர புயலாக மாறி, நள்ளிரவு மக்கள் நல்ல உறக்கத்தில் இருக்கும் நேரத்தில் ராமேஸ்வரத்தை கடந்து, பாம்பன் தீவில் உள்ள அழகிய வாணிப நகரத்தை-  தனுஷ்கோடியை, இருக்கும் இடம் தெரியாமல், முழுவதுமாக சுத்தமாக  மூழ்கடிக்க செய்துள்ளது. 

அதே புயல், தன் பயணத்தினை அதிவேகமாய், பாக் ஸ்ட்ரைட் வழியாக, வவுனியாவையும் கடந்துள்ளது. அன்று மட்டும் கடல் அலைகளின் உயரம் 24 அடிக்கும் மேலே உயர்ந்துள்ளதாம். கடல் ஆராய்ச்சியாளர்கள், இந்த மாதிரியான ஒரு கோரபுயலை, அதுவரை இந்தியா பார்த்ததே இல்லையென  சொல்கிறார்கள். இந்த புயல், அன்று மிகவும் மோசமான கோர தாண்டவம் ஆடியுள்ளது. 
 
மானிடராய் பிறந்தாலே கவலைகள் இருக்கும். அதுவும் இந்த கடல்புரத்தில் பிறந்த மக்களுக்கு - கவலைகள் மட்டும் சூழாமல், கடல் அலைகளாலும் சூழப்பட வேண்டுமோ? இதனுடன்மிகவும் பல கோர சம்பவங்களும் நடேந்தேறியுள்ளது.  வாழ்ந்த மனிதர்களுக்கு அடிமேல் அடி. மோசமான அழிவை - அங்கிருந்த சந்ததியினர் சந்தித்துள்ளனர்.  வாழ்ந்த அனைத்து மக்களும் கடலினுள் ஜல சமாதி. 


Dhanushkodi Railway Station

அந்த நாட்களில் பாம்பன் - தனுஷ்கோடி  பாசெஞ்செர் சர்விஸ்இரவு நேரத்தில் கடைசி ரயிலாக, ரெகுலராக  போகுமாம். பாம்பன் தீவை கடந்து தான் தனுஷ்கோடி செல்லும். கிட்டத்தட்ட 28 கிமீ தூரம் பயணம், கடல் மேலே கடக்க வேண்டும். அந்த டிசம்பர் 22 ஆம் தேதியன்றும், இந்த தனுஷ்கோடி பாசஞ்சர், 5 ரயில்வே பணியாளர்கள், 110 பயணிகளோடு பாம்பன் ஸ்டேஷனை விட்டு கிளம்பி உள்ளது. 

இரவு 11.55 மணிக்கு, எஞ்சின் ட்ரைவருக்கு சரிவர சிக்னல், தனுஷ்கோடியில் இருந்து கிடைக்கவில்லை. எஞ்சின் டிரைவர், தனுஷ்கோடி ரயில்வே ஸ்டேஷன் சிக்னல் கிடைக்காமல் போகவும், ரெயிலை கொண்டு செல்ல ரயில் பாதையும் தெரியவில்லை. அவரும் அருகில் உள்ளே ராமேஸ்வரம் ஸ்டேஷனோடும் பேச முடியவில்லை- தொலைபேசி லைன் கட் ஆகியிருந்தது. எஞ்சின் ட்ரைவர் கூட,  கும்மிருட்டு வேறுரிஸ்க் எடுத்தே விஸில் கொடுத்துவாறே ரயிலை எடுத்துள்ளார். பல முறை தயங்கி தயங்கியே தான் ரயிலை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

இதற்குள் இன்னொரு மோசமான நிகழ்வு நடந்துள்ளது. என்னவென்றால், புயல், தனுஷ்கோடியை ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு தான்,  சுத்தமாக ஊரையே துடைத்து விட்டு, புயல் அதி தீவிரமாக இங்கே வந்துக் கொண்டிருந்தது. ஆர்பரிக்கும் கடல் அலைகளின், அடுத்த டார்கெட்டே, பாம்பன் ரயில்வே ஸ்டேஷன்தான். அது யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.

விதி அவரின் கண்களை மறைத்து விட்டது. பாம்பன் ஸ்டேஷனை தாண்டி, கொஞ்ச தொலைவிலேயே, அதற்கு முன்னதாகவே ரயில் பாதை முழுவதுமே கடலில் மூழ்கிப்போயுள்ளது. அதுவும் தெரியவில்லை. 

தெரியாமல் ரயிலை நகர்த்தி விட்டார். அதற்குள் அந்த ஆறு கோச் ரயில்,  மாபெரும் ராட்சச அலைகளால் கடலுக்குள் அடித்துஇழுத்து செல்லப்பட்டு விட்டது. அன்றைய  மண்டபம்  மரைன் சுப்ரிடென்டன்ட்,  ரயில்வே புல்லடின் செய்தியாக இதனை சொல்லியுள்ளார்.

பின்னர் காலங்களில், இந்த ரயில் ஆக்சிடேன்டைஇதனை ஆய்வு செய்த சதர்ன் ரயில்வே நிர்வாகமும், புயல் முதலில் தனுஷ்கோடியை தாக்கிய நேரத்தில், தனுஷ்கோடி ரயில்வே ஸ்டேஷனை அழித்ததோடு நிற்காமல், தொடர்ந்து, பாம்பனுக்கு வரும் பல கிலோ மீட்டர் இருப்புப்பாதையும் பதம் பார்த்துள்ளது. ஏற்கெனவே பாதையும் அடித்துச் செல்லப்பட்டிருக்க கூடும் என்கிறார்கள். அதனாலேயே சிக்னல் தனுஷ்கோடியில் இருந்து கிடைக்கவில்லை. அது புரியாமல், எஞ்சின் ட்ரைவர் ரயிலை இயக்கி விட்டார் என நிர்வாகமும் ரிப்போர்ட் செய்துள்ளது. 

இது மட்டுமில்லாமல், ராமேஸ்வரத்தை இணைக்கிற மாதிரி, ஒரு பாலம் அமைத்துக் கொண்டுருந்தார்கள். அதுவும் புயலில் அழிந்து போய்விட்டது. அந்த காண்ட்ராக்டர் நீலகண்டன் & கோ ஒனேர் கூட, பேரிழப்பை தாங்க முடியாமல் தன்னை தூக்கிட்டு கொண்டார் என்பார்கள். இன்றும் அந்த நினைவு எச்சங்களை கடலில் பார்க்கலாம்.

அந்த புயலிலும் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்நீச்சல்  காளிஅவரை சந்தித்து பேசினோம். பேசும்போது அவர் விழியோரம் கண்ணீர்த்துளி அரும்பியது.

               Neechal Kali

  
ஒட்டு மொத்த தனுஷ்கோடி தீவு, புயலால் சின்ன பின்னமாகி, வாழுந்து வந்த எல்லா மக்களும் மூழ்கி போயினர் . ஒரு அழகான சிறு நகரமே மூழ்கின. பல நாட்கள் அந்நகரம் கடல் தண்ணீரால் சூழப்பட்டே இருந்ததாய் சொல்லுகிறார்கள். அப்போதைய மெட்ராஸ் மாநில அரசு, அந்த இடம் யாருக்கும், வாழ தகுதியற்ற இடமாய் (Ghost  Town ) அறிவித்ததாக சொல்கிறார்கள். 

நான்கு வருடத்திற்கு முன்னர்தான்  அந்த இடத்திற்கு சென்று வந்தேன். இப்போது கூட ஒரு சில ரயில் தண்டவாளமும், எஞ்சிய சிதிலமான சர்ச்சும் நினைவு பொருளாக மாறிப்போயுள்ளன. 

எங்கும் பார்த்தாலும் கடல், சரியான பாதை இல்லை, எங்கு நோக்கினும் மணல் மேடுகளும் சதுப்பு நிலம் போலவும் மாறியுள்ள ஒரு இடம். அந்த மணல் சகதிப் பாதையில் ஜீப் மட்டும்தான் போக, வர முடியும்.  

Dhanushkodi Tip


அங்கே வாழ்ந்தமனிதர்கள், மனதிற்குள் என்னென்ன கோட்டைகளை கட்டினார்களோ, எப்படி வாழ்ந்திருப்பார்களோ- எதுவும் சரிவர தெரியவில்லை. எப்படியெல்லாம் கடல் அலைகளால் அலை கழிக்கப்பட்டர்களோ,  எப்படி ஒரு நகரமே கடலால் அழிந்துபோயிருக்கும் என்பதை கற்பனை தான் செய்ய முடியும்.   மின்சாரம் , உணவு, பாதைதொலைத் தொடர்பு , சாலைகள்   துண்டிக்கப்பட்டு எப்படி அல்லல் பட்டார்களோ - என்பதை நினைத்தால் நெஞ்சமே நடுங்குகிறது.

அவர்களின் வாழ்க்கை எல்லாம் நிராசையை போய்விட்டது. கடலின் சீற்றம் அளவில்லாதது. அன்று, கடல் கொண்ட தினம். இயற்கையை, மனிதனால் என்றுமே வெல்ல முடியாது. 

என்னோட தனுஷ்கோடி துயர நினைவுத் துளிகளை, ஒரு சில புகைப்படங்கள் வழியே இன்றும் பார்க்கலாம்.   
 
Dhanushkodi End


கனத்த இதயமோடு திரும்பி வந்தேன்.  இன்னும் பல நாட்களஅந்த தனுஷ்கோடி மக்களின் நினைவு வந்து வந்து போய்கொண்டிருக்கும்.