Monday, July 23, 2012

விழி மூடி உனை நேசித்தேன்..

தாம்பரம் ரயிலடி
MEPZ நிழல் குடை
ராமானுஜம் கம்ப்யூட்டர் சென்டர்
அடையாறு ஸ்டுடென்ட் செராக்ஸ்

அவளோடு நான் சென்ற இடமெல்லாம்..
காவிய சின்னங்களாய் போயின இன்று....
நான் அவளை தொலைத்தாலும்
கனவில் அவளை தொலைக்க முடியவில்லை..

அவளின் சிணுங்கின சிதறல்கள்..
என் தோளில் உராய்ந்த அவளது கேசம்..
நிலை கொள்ளாமல் அலைபாயும்  விழிகள்...
எனை தேடும் தொலைதூர நேசம்....

பொருள்  தேடி நான் பயணித்தேன்..
விழி மூடி உனை நேசித்தேன்..
நான் வரும்வரை காத்திருப்பேன்
என்றாய் பெண்ணே -

















வந்தேன், தேடி அலைந்தேன் ... 
நான் அவளை தொலைத்தாலும்,
கனவில் -
அவளை தொலைக்க முடியவில்லை..

No comments:

Post a Comment