Tuesday, July 24, 2012

காதல்


காதல்
இதில் விழுபவர்களும் புரிவதில்லை
விழுந்து எழுபவர்களுக்கும்
புரிவதில்லை


திருமண வாழ்க்கை
கையில் விளக்கு
வைத்துக்கொண்டே
போய், 
கிணற்றில் விழுவது....

வயது
முதிர் இளைஞ்சர்களால்
மறைக்கப்படும்
மாத காலண்டர்....


நாணம்
பெண்கள் விடும் பாணம்
வாத்தியார் சொன்னது..


பாவாடை தாவணி
இந்த நூற்றாண்டிலிருந்து
தொலைந்து போன
தமிழ் பெண் அடையாளம்


அரசாங்க திட்டம்
புதியதாய் வரும் அரசுவிற்கு
அது-
தொலைக்க படவேண்டிய சிம் கார்டு



ஆடிமாதம்
அனைத்து வகை
அம்மன்களையும்
செவிடாக்கும்
நவீன கால பக்தி...



செல் போன்
பெண்களுக்காக படைக்கப்பட்ட
மிஸ்டு கால்
இயந்திரம்

No comments:

Post a Comment