Tuesday, July 24, 2012

facebook culture...


காணும் மனிதருக்குள் எத்தனை முகங்கள்...தாங்கள்தான் அதிமேதாவி போல் காட்டிகொள்வதும், மற்றவர்களை முட்டாளாக நினைப்பதும் முக நூலில் நிறைய பார்க்கலாம். அதைவிட கொடுமை, மற்றவர்களை கேலி செய்வதும், ஏளனமாக மற்றவர்களை மன நோக செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.

இருக்கலாம், அவர்கள் எல்லாம் தெரிந்த அதிமேதாவியாக கூட இருக்கலாம், ஆனால் அவர்கள் மற்றவர்களை குறை சொல்லும் அவர்களுக்கு உரிமை யார் தந்தார்கள்? தன் கருத்துக்களை மற்றவர்களை மனம் வலிக்க பதிவு செய்வதுதான் இன்பமோ? அவரவர் பிரச்னை அவரவர்களுக்கு,  இனிமை தேடி  இங்கு வந்தால்,   கனத்த இதயத்தோடு போக வேண்டி வருகிறது.

மற்றவர்களை நாம் சந்தோசமாக வைக்க முடியாமல் போனாலும், அட்லீஸ்ட் மனம் வலிக்க பேசுவதை தவிர்க்கலாமே. தன் நிலைமையை யாரும் யோசித்து பார்பதும் இல்லை. மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் பகைத்து கொள்வதும், தூற்றுவதும், தனி நபரை தாக்குவதும் என்னே அழகோ? அதுதான் மனித நேயமோ?

No comments:

Post a Comment