சுஜாதா காதலைப் பற்றி சொல்கையில், இதற்கு விஞ்ஞானம் பதில் சொல்கிறது என்பார், ”இயற்கை நம்மை ஒருவகையான நபருக்கு மட்டும் தயார் செய்து வைத்திருக்கிறதாம். உங்கள் ஒவ்வொருவர் மனதின் ஆழத்திலும் ஒரு பிரத்யேக நாயகன் அல்லது நாயகி இருக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட காதல் வரைபடம். அதாவது, தனிப்பட்ட முகம், சுருள் முடி, அழுத்தமான உதடு, தனிப்பட்ட இத்யாதிகள். இந்த உருவம் உங்கள் ஆரம்ப இளமைக் காலத்தில் மனதில் உருவாகிறது. அந்த முகத்தைச் சந்திக்கும்போது ஒரு கை சொடக்கில் காதல்".
சுஜாதா சொன்ன இத்யாதிகள் - அப்படிப்பட்ட உருவம், நம் இளம் மனதில் நிச்சயம் கனவுப் பக்கங்களில் உலா வரவே செய்யும். கற்பனையாய் மனதில் பதிந்த உருவத்தை, அதியசமாய் அபூர்வமாய் சந்திப்பதும் நடந்து விடுவதும் உண்டு. ஆனால், அந்த இனிமையான தொடர்பு எப்போதும் தொடருமா என தெரிவதில்லை.
விதிவசத்தாலோ, இல்லை ஏதோ வகையிலோ அவ்வாறு இழந்து விட்ட உணர்வுகளை, பின்னர் காலங்களில் அசைப் போடத்தான் முடியும். இதனை கேள்வியுரும் நண்பர்கள், இதுவும் கடந்து போகும் என்பார்கள். ஆனால் அந்த மெலிதான நினைவுகள், அழகான தருணங்கள் மீண்டும் மீண்டும் நமது நினைவுப்பாறைகளில் வந்து வந்து - முட்டி மோதி, அலையலையாய் ஓயாமல் மௌனமாக அடித்துக்கொண்டுத் தான் இருக்கும்.
அடி மனதில் ஆழமாக புதைந்து விட்ட அத்தகைய மௌனங்கள், எப்போதும் கலையப் போவதில்லை...

No comments:
Post a Comment