Thursday, April 29, 2021

"சில்லென்ற சில்லென்ற காற்றிலே"

 

இங்கே எனது பாடல் ரெவ்யூ.

இசை ஜாம்பவான்கள் பலர் இருந்தாலும், மிகத் திறமையான இளம் இசைக் கலைஞர்களும் இருக்கவே இருக்கிறார்கள். ஏதோ ஒரு விதத்தில், அவர்களின் இசையும், நம்மை பாதிப்படைய செய்கிறது‌. ஆச்சர்யம். இவர்கள், எதோ ஒரு சின்ன புள்ளிகளில், நம்மோடு இணைகிறார்கள். அது, பெரும்பாலும் அது காதல் வயப்பட்ட நினைவுகளாகக் கூட இருக்கலாம்.
காதல் இசைக்கு மயங்காதவர் யாரும் உண்டே!
ரம்ஜான் பண்டிகையின் போது, ஏதோ ஒரு பெரிய முஸ்லிம் பணக்காரரின் வீட்டில் நடப்பது போல் இந்த பாடல் வரும். ரிச்சான பாடல் தளம், மிகவும் அழகான முஸ்லிம் பெண்கள்.
பாடலும் கூட இஸ்லாமிய பாணியிலே, ஜிப்ரான், மிக அழகாய் அமைந்திருப்பார். அழகான ஹம்மிங் ஆரம்பிக்கும். ஆரம்பமே களைக்கட்டும். முஸ்லிம் ப்ரேயரோடு ஆரம்பித்து, நம்மையும் காட்சிகளோடு இன்வால்வ் செய்து விடுவார்கள். அதுவும் சுஃபியில் சில வரிகளை எடுத்திருப்பார்களோ!
ஜோத்தா அக்பரில் வரும் க்வாஜா மேரே க்வாஜா சுஃபி பாடல்கள் போன்று பெர்ஷியன் பாணி‌ இதிலும். இஸ்லாமிய கலாச்சார வடிவங்களில் ஒன்றான சுஃபி இசையினை லேசாக நுழைத்தது வாவ் ரகம்.
"க்யாஹ் க்ரேஹ் மேரே மௌவ்லா
சுக்ரியாஹே தேஹ்ரா..."
"க்யாஹ் க்ரேஹ் மேரே மௌவ்லா
சுக்ரியாஹே தேஹ்ரா..."
மெலிதான இசைக்கோர்வை இசை. நிறைய இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் இல்லையென எனலாம். பேக்ரவுண்டில் கூட, ஸ்ருதியைக் கூட்டவே, முஸ்லிம் ட்ரெடிஷனலைக் கூட்ட, ரிதமிக்கான ஃபைபர்ஸ்கின் tambourine ஒலிகள். கோரஸாக உருது வார்த்தைகளைப் பாடியிருப்பார்கள். ஆண்குரல்களைப் பொருத்தவரையில், சுந்தர்ராவ், முன்னா சௌகத் அலியோடு ஜிப்ரானும் சேர்ந்துக் கொள்கிறார். மூவரில் ஒரு ஆண்குரல், ஸோலாவாகப் பாடும் போது, அபாயகரமான ஹை- பிட்ச்க்கு போனாலும், திரும்பவும் ஸ்ருதியில் வந்து, பர்ஃபெக்ட்டா synchronize ஆகிறது.
அட்டகாசம் என தோணினாலும், there is some discomfort while he tried to sing this with high pitch notes, it seems; anyway, it's been beautifully crafted....
ஆண் குரலில் பாடியிருப்பவர், ஜெய்யே பாடியிருப்பது போலவே இருக்கும். Perfect voice matching.
"சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே..
மெஹந்தி வரைந்த வானிலே
பாடிப் பறந்தேனே..."
பெண் குரலில், கௌசிஷிகி சக்ரபர்ட்டி, பெங்காலி, ஹிந்துஸ்தானி பாடுவதில் சமர்த்தர். தமிழ் வார்த்தைகளை அட்க்ஷர சுத்தமாய் பாடியுள்ளார். அதியசமே. இவரின் குரல், ஹேபா பட்டேலின் காஸ்ட்யூமை விட, பாடலின் அழகை இன்னும் மெருகேற்றுவது போல இருக்கிறது.
"கர்தேஷி துனியா...
சுற்றிடும் உலகமும்
சுழலும் ஓசையும்
காதில் கேட்குமா.."
என்னவொரு குரல்! அருண் ஐஸ்கிரீமின் டபுள் ஃபேளவர் ரொம்பவே பிரசித்தம். அதுவும் கொஞ்சம் மெல்ட்டான இட்டாலியன் டிலைட்ஸ் வித் வெனிலா ப்ளாசம் சாப்பிடும் போது, தொண்டையில் வழுக்கிக்கொண்டு போறதே தெரியாது. அது போன்ற ஐஸ்கிரீம் வாய்ஸ்.
நான் டைரக்டராக இருந்திருந்தால், இந்த முஸ்லிம் பெண்ணையே ஜெய்யைக் காதலிக்க வைத்திருப்பேன்.
வித்தியாசமான காதல் கதை. கதைப்படி, ஜெய்யும் நஸ்ரியாவும் ஐயங்கார் ஆத்துப் பிள்ளைகள். கோவை போகும் ட்ரெயனில் சந்திக்கிறார்கள். ஏதோ ஒரு சூழ்நிலையால் இரண்டு பேருமே முஸ்லிமாக மாறி, ஒருவரையொருவர் ஏமாற்றுகிறார்கள்.
டைரக்டர், சின்ன சின்ன விஷயங்கள் மூலமாக, அவர்களின் காதலை சொல்லியிருப்பார்.
ஒரு காலக்கட்டத்தில், இனிமையான காதலை இருவரும் உணர்கிறார்கள்.
"சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேன்
தேடி அலைந்தேன்..."
வாழ்க்கையில், காதல் வயப்படுவது என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அட்டாகாசமான, மனம் சார்ந்த கெமிஸ்ட்ரி விளையாட்டுகள்.
அந்த உன்னதமான தருணங்களில், ஆஹா, இந்த பிரபஞ்சமே முழுவதுமே மிகவும் அழகாய் தெரியக் கூடும்.❤️❤️❤️.
"வானில் உதிர்ந்த இறகொன்று
காற்றின் கன்னங்களில்
கவிதை எழுதியதே..."
காதல் உணர்வுகளே அழகு இல்லையா!!!!
பொதுவாக, காதல் பல நிலைகளில் ட்ராவல் ஆகும். இந்த இனிமையான காதல், ப்யார், லவ் - இது கன்ஃபார்ம் ஆவதற்குள், அதுவும் அவளைப் பார்க்கும் போதெல்லாம்; நமக்குள் சில பரவசங்கள் உண்டு பண்ணுவே செய்யும். It's a terrific algorithm which never make us to understand in our life ❤️❤️❤️❤️
இந்த பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா, அன்பே !!!
நிஜமான காதல் வயப்பட்டவர்கள், இது மாதிரியான பாட்டோ, ஸீனோ பார்க்கும் போது, இதயத்தினுள் சின்ன சின்ன அதிர்வுவலைளை ஏற்படுத்த தவறுவதே இல்லை. இதில் ஜெய்யும் நஸ்ரியாவும் உணர்கிறார்கள்.
இங்கே வருவோம். ஸோ, ஜெய்யும் நஸ்ரியாவை - முஸ்லிம் பெண்ணாக நினைத்துக் கொண்டு இருப்பதால், இம்ப்ரெஸ் செய்ய இஸ்லாமிய கோட்பாடுகளை கற்றுக் கொள்ள, ஒரு முஸ்லிம் பெரியவரிடம் செல்கிறார். அவர் வீட்டில் ஒரு அழகான முஸ்லிம் பெண் வேறு இருக்கிறாள். இங்கே தான் ஹேபா பட்டேல், இந்த முக்கோண கதையில் நுழைகிறார்.
இந்தப் பெண்ணும், ஜெய்யை விரும்ப ஆரம்பிக்கிறார்கள். ஆனால் விஜய ராகவாச்சாரி என்கிற ஜெய்யோ, ஆயிஷா என்கிற நஸ்ரியாவை அதி தீவிரமாக காதலிக்க தொடங்கி விட்டார்.
ஜெய், நஸ்ரியாவை தீவிரமாய் நேசிப்பார், அந்த முஸ்லிம் பெண் பாடுங்கின்ற பாட்டுக்கு கூட, ஜெய் பட்டும் படாமல் பதில் சொல்வார்..
"உன் மூச்சு நின்றாலும் - உன்னைத் தான் நீங்காத சொந்தம் எது..."
"கண் மூடிப் போனாலும் - உன்னோடு சாய்கின்ற நிழல் தானது...."
அடுத்த வரிகள் இன்னும் அழகு, ஷேவாக், ஷோயப் அக்தரின் outside the offside பந்தை, நின்ற இடத்திலிருந்து, ஹூக் அடிப்பதற்கு சமம்.
"மெல்லிய வெப்பத்தில்
மேகத்தின் குளிர்சியின்
சலனம் தான் எது?"
அவளோ எதையோ எதிர்ப்பார்த்து பதிலை காத்திருக்க, அதே அக்தரின் யார்க்கரை, ஷேவாக் டொக் வைத்த மாதிரி இருந்தது...
"சட்டென்று தூவிடும்
நட்பென்னும் பூ மழை
சாரலே அது...."
பாடல் எழுதியவரை பாராட்டியே தீர வேண்டும்.
"என்னைப் போல் பெண் ஒன்று,
அச்சாக இன்னொன்று கண்டேனே
நான் இன்று யாரென்று சொல்..
நேசத்தை சொல்ல
வார்த்தை வசப்படுமா...
கடைசி சரணத்தில், பாட்டு முடியும் தருவாயில் கூட,
"வாழ்வே உன்னோடு
என்னோடு இணைந்திட வா...
இனி எல்லாம் நீ தான்
நீயே நான் தான்"
You are the last thought in my mind before I drift off to sleep and the first thought when I wake up each morning....

No comments:

Post a Comment