பிடிச்ச பாடல் -1
இந்த பாடலை ஹிந்தியில் பார்க்கும் போது இருக்கும் நேர்த்தி, தமிழில் பிடிக்காமல் போய்விட்டது. காரணம், நேட்டிவிட்டி. ஹிந்தி முகங்களுக்கு, எப்போதும் தமிழ் லிரிக்கஸ் ஒத்துப் போவதில்லை. தமிழில் கேட்கும் போது, பாட்டு மனதில் ஒட்டவே மாட்டேன்கிறது. அதற்கு, இந்த பாடலே ஒரு பக்கா எக்ஸாம்பிள். தக்காளி தோக்கிலே, பெர்செண்டேஜ் ஆஃப் வெங்காயம் அதிகமாகப் போச்சுன்னா, தக்காளியும் வெங்காயமும் சிதறிண்டு நிக்கும். அதுபோலவே இதுவும்.
அடுத்தது, ஒரிஜினலா ஹிந்தியிலேயே இருப்பதால் அப்படியே கேட்கலாம். மிக அழகான ரொமாண்டிக் பாடல். அதுவும் ஐஸ்வர்யா ராய்க்கு ரிச்சான காஸ்ட்யூம். பொதுவாகவே, ஐஸ்வர்யா, க்ளாசிக்கல் டான்ஸர் என்பதால், ஒரு லாங் ஷாட்லே லேசான நடன அசைவுகளை ஆரம்பித்து, நிறைய ரிதமிக்கான உடலின் சுழற்றலோடு கைகளின் முத்திரைகளில் முடித்து வைப்பார். How Sweet she is !!!
இதுல என்ன அழகுன்னா, அவரின் உயரமான உருவமும், அதற்கேற்ற மெல்லிய உடல்வாகும், நீண்ட கால்களும், சிற்ப வளைவுகளும், நார்த் இண்டிய பெண்ணைப் போன்ற லேசான ஒட்டிய கன்னங்களும் காமெராவின் கண்களுக்கு தப்பவில்லை. நம் மனதை கொள்ளை கொள்ளவே செய்கிறது. அந்த மூன்று நிமிஷ பாடலில் மூவாயிரம் காதல் உணர்வுகளை கொண்டு வந்து விடுவார். அழகோ அழகு.
ஆண் குரலில், வேறு யாராவது பாடியிருக்கலாமோ எனத் தோணுது.
பாடல் ஆரம்பத்திலேயே, ஹிந்துஸ்தானி நோட்ஸ் டச் பண்ணுவார். ARR க்கு ஸ்வரங்கள் சொல்லும் போதும், ஏதோ ஒரு தடுமாற்றம் இங்கே தெரிகிறது. தொண்டையில், ப்ரேக் வருவதை இப்பாடலில் பார்க்கலாம். Breadth போதவில்லை. இதுலே மஹா கோரம் என்னவெனில், ARR வாய்ஸ் - ஹாரிபிள். அதுவும் அந்த ஹிந்தி வார்த்தைகளின் உச்சரிப்பு படு கேவலம். வார்த்தைகள், ரொம்பவே ஹார்ஷா வெளியே வந்து விழுகிறது. வெட்டி வெட்டி பாடுவார். காட்டுறே, காட்டுறே, ஹாஹாஹா.,.
அவருக்கு இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. பொதுவாக ARR க்கு ஹை பிட்சில் போகும் போது கொடுமையாக கீறல் விழும், பிசிர் அடிக்கும். பாடலில் சொல்லிக் கொடுக்க தெரியலாம் - ஆனால் பாடும் போது இடிக்கும்.
நுணுக்கமான கமக்கம் (Gamakas) - இதுக்கும், அவருக்கும் ரொம்பவே தூரம். ஆனால், கம்போஸ் பண்ணும் போது, பாடுகிற மற்றவரிடம் அழகாய் கொண்டு வந்துவிடுவார். அவருக்கு யாரு போய் சொல்றது, ஐயா பாடறதை நிறுத்தும். ஹிந்தியில் பேசுவது வேறு, பாடுவது வேறு. பாடும் மொழியின் வார்த்தைகளே வேறு என்று. பொதுவாகவே ஹிந்தி லிரிக்ஸில், உருது வார்த்தை களையும், சான்ஸ்கிரிட் கொஞ்சம் தெளிப்பதையும் தவிர்க்கவே முடியாது.
கொஞ்சமாவது மொழியை உள்வாங்கி, நெளிவு சுழிவுகளோடு பாட வேண்டும். இது ஹிந்தி படிக்கிறவர்களுக்கு தான் - மொழியின் அர்த்தம் புரியும். விளங்கும். இசையில், மொழியின் உச்சரிப்பும் மிகவும் அவசியம்.
எல்லா மொழிகளிலுமே இலக்கிய தரமான வார்த்தைகள் இருக்கு. அதனைப் பாடும் போது உச்சரிப்பை தவற விடக்கூடாது, அதனை பெண்ணின் வளைவுகளை போல மிக துல்லியமாகவும், நயமாகவும் பாடவேண்டும்.
தமிழ் ஆளு ஹிந்தி எப்படி பேசுவாங்க நமக்கு தானே தெரியும்.
அது எப்படினா, என்னைப் பற்றி, என் ஆம்படையாளின் தலை சிறந்த ஓபினியன் ஒண்ணு இருக்கு, "இவரால 200 மெகா வாட் ப்ளாண்ட் கூட கட்டி முடிச்சுட்டுவார், ஆனால் 800 ஸ்கொயர் ஃபீட் வீடு கட்ட தடவுவார்", என்பாள். வீட்டில் யாராவது அரைமணி நேரம் பேசிண்டு இருக்கப் படாது, அவளுக்கு இதை சொல்லியே ஆகணும். இல்லைனா அவளுக்கு ரெண்டு நாளைக்கு தூக்கம் வராது. அதுபோல ARR ஆஸ்கார் வித்வானா கூட இருக்கலாம், ஆனா பாடினா சகிக்காது. வித்துவான் நல்லா கத்துவான், அவ்வளவே.
முழுமையாக பார்க்கும் போது கலக்கல் ஸாங். காரணம், மிகச் சிறந்த இசைக்கோர்ப்பே. இதில் ரஹ்மான் முந்தி விடுகிறார்.
அதுவே பின்னாடி பாடும் ஹார்மனி கேளூங்களேன் - முர்தஸா கான், காதிர் கான் என்ன மாதிரி பெர்ஃபெக்டா பாடுகிறார்கள். மெலிதான குரலில் ஒரு அற்புதமான குழைவுகள். சின்மயி பற்றி சொல்லவே வேண்டாம். வெரி ஸ்வீட் வாய்ஸ் . அதுவும் 3.06 லிலிருந்து கவனியுங்களேன், லவ்லி, ஐஸ்வர்யா ராயின் அழகைப் போன்றே, இவர் குரலும். அந்த மூன்று லைன் "தேரே பினா சாந்த்..." ...Wow ...
அசத்தல் சின்மயி. என்னோட ஆல் டைம் ஃபேவரிட் ஸிங்கர்.
இதை விட பியூட்டி, பாடலின் கடைசியில் உயரமான அபிஷேக், அசத்தலாய் நடந்து வரும் ஐஸ்வர்யா ராயின் Glass hour hip ஐ இழுத்து அணைப்பது தான்.... 


No comments:
Post a Comment