Thursday, April 29, 2021

 "ரக்கா" - பழமைவாதிகளின் புலம்

பொதுவாகவே நிறைய war movies பார்க்கும் பழக்கம் உண்டு. ஒரு விதமான obsession என்று கூட சொல்லலாம். எக்கச்சக்கமான war movies கலெக்சன்ஸ் வைத்திருக்கேன். திருப்பி திருப்பி பார்த்துண்டு இருப்பேன். இப்போது வெறுமென உட்கார்ந்து கொண்டிருப்பதால் ஐபாட் ப்ரோவில் நிறைய படங்கள் பார்க்கும் படி ஆகிப் போகிறது. அதை தேடி தேடி ஐபாடில் பார்க்கும் வழக்கம் இப்போதும் தொற்றிக் கொண்டது. அதுவும் வித்தியாசமான தலைப்புகளில் வரும் வெப் சீரிஸ் சரியான தீனி, என்னைப் போல் மூவி ப்ரியர்களுக்கு. கலக்கலோ கலக்கல்.
அப்படி பார்த்த சீரிஸ் தான் கலிஃபா (Kalifat- Caliphate) இதுவரை அரைகுறையாக சிரியாவை பற்றி தெரிந்து வைத்திருக்கும் போது, சிரியாவை சுற்றிலும் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் போது - இந்த மாதிரி படங்கள் நிறையவே தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக இஸ்லாமிக் ஸ்டேட் பற்றிய நிகழ்வுகளை, படிக்கையில் பார்க்கையில் இயல்பாகவே ஆர்வம் தொற்றிக் கொள்கிறது.


கதை நடப்பது என்னவோ ஸ்வீடன், ஜோர்டன் மற்றும் ரக்கா (Islamic state Raqqa) சார்ந்த இடங்களே. இதனை ஒற்றியே, அதைப் பற்றிய நிறைய குறிப்புகளோடு கதையும் நகர்கிறது. ரக்கா, சிரியாவில் உள்ள சிறிய நகரம். அது, சிரியா சிவில் வார் நடந்த போது, தனிமைப்படுத்தப்பட்ட இஸ்லாமிக் ஸ்டேட் மற்றும் தலைநகரமும் கூட. இந்த caliphate வெப் சீரிஸ், கற்பனையோடு ஒரு சில நிஜங்களையும் சேர்த்தே அழகாக சொல்கிறது.

மேலோட்டமாக பார்த்தால், ஹாலிவுட் படங்களில் War genre இல் வழக்கமாய் காணப்படும் திவீரவாதம் தான் கதைக்களம் இதற்கும், இது ஒரு ஸ்வீடிஷ் மூவி. இங்கே இவர்கள் எடுத்துக் கொண்ட களம், ஸ்வீடனில் நடக்கப்போகும் டெரரிஸ்ட் அட்டாக்ஸ். இதனோடு ரக்கா தீவிரவாதிகள் பங்கு என்ன, எப்படி தொடர்பு இருக்கிறது என்பதை விளக்கும் எபிஸோட்ஸ். அவர்கள் எப்படி ஜிகாதிகளை உருவாக்குகிறார்கள் - அதிலும் இளம் பெண்கள் எப்படி மாட்டிக் கொள்கிறார்கள், சாதாரண மக்களை எப்படி ப்ரைன் வாஷ் செய்கிறார்கள் என்பதும் காட்டப்படுகிறது.

அவர்களின் நெட்வொர்க் எப்படியெல்லாம் உலகம் முழுக்க விரிகிறது என்றெல்லாம் பார்க்க கொடூரமாக இருக்கிறது. அதுவும் அவர்களின் குறிக்கோள், எதற்காக இதனை செய்கிறார்கள் என்று சொல்லும் போது படு பயங்கரமாகவே இருக்கு. இத்தகைய செயல்களை செய்ய, எந்த விலையும் கொடுக்க தயங்க மாட்டார்கள் என்பதை பார்க்கும் போது, மனம் அச்சம் கொள்ளவே செய்கிறது. சுற்றி இருக்கும் innocent மக்களை, பலிக்கடாவாக ஆக்கியும் அவர்களை அழித்தும் என்ன பலன் அடையப் போகிறார்கள் என்ற எண்ணமும் கூடவே வருகிறது.

வசனங்கள் மிகவும் ஆழமானவை, பல அர்த்தங்களை சொல்ல விழைகிறது. ரொம்பவே ஷார்ப். அதில் ஒன்று, "1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போதித்த வார்த்தைகள் இது, அந்த காலகட்டத்திற்கு அது பொருந்தி இருக்கலாம், இன்றைய வாழ்க்கை சூழலுக்கு அது மிகவும் பழமையானது, அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கவும் கூடாது", என்று வருகிறது.

பயங்கரவாதத்தின் ஆணிவேரை பார்க்கையில் - தனி மனிதர்களின் பேராசைகள், மூடத்தனத்தில் ஊறிப்போன பழமை வாதங்கள், மற்றும் எதோச்சதிகாரம் இவைகளை முன்னிறுத்தியே கதை நடக்கின்றன. இதனிடையே, மனித நேயமும் இப்போதெல்லாம் குறைந்தே போய்விட்டது என நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

கதையை நான் சொல்லப்போவதில்லை. ஒரு சில வரிகள் மட்டுமே சொல்கிறேன். ராக்காவில் நடக்கும் பயங்கரவாதம், அதனை பிடிக்காமல் - எதிர்க்க முடியாமல் வாழும் கணவனும் மனைவியும், ஸ்வீடெனில் வசிக்கும் இரு இளம் பெண்களின் பழமைவாதம், ஜிகாத் ஆக மாறும் சகோதர்கள் - இவர்களை ஒருங்கிணைக்கும் அதி தீவிர முஸ்லீம் கோட்பாடு கொண்ட ஒரு இளைஞன், கூடவே ஸ்வீடன் போலீஸ் டீம் - இவர்கள்தான் கதை நாயகர்கள். இவர்களின் உணர்ச்சிப் போராட்டங்களே, செயல்களே கதை அமைப்பு.
இந்த எபிஸோட் பார்த்தும் பய உணர்வு மேலோங்கிப் போகிறது. பயங்கரம் எந்த ரூபத்தில் எப்படி வருமோ என அச்சம் வர ஆரம்பிக்கிறது. இந்தப் படம், நமக்குள்ளே பல ஆண்டுகளாக இருக்கும் விடை தெரியாமல் இருக்கும் பல கேள்விகளுக்கு, அச்சத்துடன் கூடிய பல பதில்களை, ஓரளவு புரிய வைக்கின்றன. இதுவே இந்த டைரக்டருக்கு வெற்றி.

No comments:

Post a Comment